​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் வைத்துக்கூட காங்கிரசை கண்டுபிடிக்க முடியாது" - அமித் ஷா

Published : May 21, 2024 6:49 AM

"தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் வைத்துக்கூட காங்கிரசை கண்டுபிடிக்க முடியாது" - அமித் ஷா

May 21, 2024 6:49 AM

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் மூலம் தேடினாலும் காங்கிரஸ் கட்சியைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் பாரத ஒற்றுமை யாத்திரை சென்ற ராகுல் காந்தி, ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரஸை கண்டுபிடிக்கும் யாத்திரை செல்வார் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும்வரை, யாரும் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுவரை நடைபெற்ற நான்கு கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு 270 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு 40 இடங்கள் கிடைப்பதே கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.